சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பிரபல பின்னணி இசை பாடகர் ஆரவமுதன் வெங்கட ரமணன் என்கிற ஏ.வி.ரமணன். ஏராளமான பின்னணி பாடல்களை பாடி உள்ளார். பாடகி உமா ரமணனை திருமணம் செய்து கொண்டு அவருடன் இணைந்து 'மியூசியானோ' என்ற இசை குழுவை தொடங்கி ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். தொலைக்காட்சி வரலாற்றின் முதல் இசை நிகழ்ச்சியான 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவியரசர் கண்ணதாசன் இவருக்கு 'இசை நிலவு' என்ற பட்டத்தை வழங்கினார்.
ஆனால் ஏ.வி.ரமணன் அடிப்படையில் நடிகராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார். 1980ம் ஆண்டு வெளிவந்த 'காதல் காதல் காதல்' என்ற படத்தில் அவர்தான் ஹீரோ. அவரது ஜோடியாக தீபா நடித்திருந்தார். எம்.ஏ.காஜா இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு சத்ரியன், என்னவளே, பாய்ஸ், மதுர உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார்.