ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
பொதுவாக ரஜினியின் கால்ஷீட்டுக்காகத்தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் காத்திருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் பஹத் பாசிலுக்காக காத்திருந்திருக்கிறார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 45 நாட்கள் அதாவது ஒன்றரை மாதம் காத்திருந்துள்ளார்.
இதுகுறித்து வேட்டையன் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் கூறியிருப்பதாவது: கதையை எழுதும்போதே இந்த கேரக்டருக்கு பஹத் பாசில்தான் என்று முடிவு செய்து விட்டேன். ரஜினி முதல் தயாரிப்பு நிறுவனம் லைகா வரை படப்பிடிப்பு ரெடி. கதையை கேட்ட உடன் நடிக்க ஒப்புக்கொண்ட பஹத் பாசிலால் வரமுடியவில்லை. அப்போது அவர் 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த கேரக்டரை பஹத்தை வைத்துதான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னதும் ரஜினியும் ஏற்றுக் கொண்டார். ஒன்றரை மாதத்திற்கு பிறகு பஹத் வந்தார், படப்பிடிப்பு தொடர்ந்தது.
பஹத் மற்ற நடிகர்களைவிடக் குறைவான படங்களில்தான் நடிக்கிறார். ரொம்ப பிஸியான நடிகர். ஆனால் தினமும் நடிக்கிறவர் இல்லை. அவருக்குப் பிடித்தால் மட்டுமே நடிக்கிறார். அவர் கூட வேலை பார்த்ததில் அது நன்றாகப் புரிந்தது. பட வெளியீட்டுக்கு பிறகு அவரது கேரக்டர் பேசப்படும். இவ்வாறு கூறியிருக்கிறார் ஞானவேல்.