புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் ஜானி. சிறந்த நடன அமைப்பிற்காக தேசிய விருது பெறப்போகிறவர். இவர் மீது இவரது 21 வயது பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொரடப்பட்டது. ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜானி தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி ரங்கா ரெட்டி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். டில்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் விருதுபெற தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஜானிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வருகிற 6ம் தேதியில் இருந்து 10ந்தேதிவரை ஜானிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வருகிற 8ந்தேதி டெல்லியில் ஜானி சிறந்த நடன இயக்குனர் விருது பெற இருக்கிறார் ஜானி. தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக ஜானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதை பெறுவதற்காகவே அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.