ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ | மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில் | ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? | பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' | பிளாஷ்பேக் : தமிழில் திரைப்படமான மலையாள நாடகம் | மீண்டும் ஒரு ராணுவ படத்திற்காக இணையும் மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணி |

வடிவேலும் சிங்கமுத்துவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்திலிருந்து இணைந்து நடிக்காமல் இருந்தனர். மேலும் தாம்பரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கிக் கொடுத்ததாக சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் சிங்கமுத்துவுக்கு எதிராக மற்றொரு மனு தாக்கல் செய்தார் வடிவேலு. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் செயல். எனவே சிங்கமுத்து ரூ.5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும், என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று (அக்.,3) சிங்கமுத்து தரப்பில் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன். மனஉளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்து கூறவில்லை. என்னை துன்புறுத்தும் நோக்கில் வடிவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றி வடிவேலு தவறாக சித்தரித்தார். அவர் சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை. அவரை பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை. வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.