'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
1930களில் பிரபலமாக நடத்தப்பட்டு வந்த நாடகம் 'ராஜாம்பாள்'. ஜே.ஆர்.ரங்கராஜூ என்பவர் எழுதிய இந்த நாடகம், நாடக வரலாற்றில் முதல் கிரைம் திரில்லர் நாடகம். இந்த நாடகத்தை 1935ம் ஆண்டு திரைப்படமாக தயாரித்தார்கள். இதனை ஏ.நாராயணன் என்பவர் இயக்கினார். பி.எஸ்.ஸ்ரீனிவாச ராவ், கிருஷ்ண அய்யர், எம்.என், ஸ்ரீனிவாசன், கே.என்,ராஜலட்சுமி, ராஜம் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் போதிய வரவேற்றை பெறவில்லை.
இதே கதையை கொஞ்சம் மெருகேற்றி 1951ம் ஆண்டு இதே பெயரில் வெளியிட்டார்கள். இதில்தான் பின்னாளில் 'நாடக காவலர்' என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக அறிமுகமானார். ஆர்.எம்.கிருஷ்ணசுவாமி படத்தை இயக்கினார். இதில் நடேசன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் வீணை எஸ்.பாலசந்தர் நடித்தார். பின்னணி இசையும் அவரே.
வயதான நீதிபதி ,இளம் பெண் மீது கொண்ட மோகத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அந்த பெண்ணை அடைய நடத்தும் குற்ற சம்பவங்களே படத்தின் கதை. ராஜாம்பாளாக பி.கே.சரஸ்வதியும், லோகசுந்தரியாக மாதுரிதேவியும், பாலாம்பாளாக சி.ஆர்.ராஜகுமாரியும், கனகவல்லியாக சி.கே.சரஸ்வதியும் நடித்தனர். நீதிபதி நீலமேக சாஸ்திரியாக டி.என்.சிவதாணு நடித்தார்.
திரைப்படமான முதல் கிரைம் திரில்லர் நாடகம், முதல் இரண்டாம் பாக படம் என்கிற வகையில் இந்த படம் முக்கியத்துவம் பெறுகிறது.