''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாள திரை உலகில் வாய்ப்பு தருவதற்காக பெண்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்லுமாறு பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவது ஒருபுறம் என்றால் தங்களுக்கு அடிபணியாதவர்களை தங்களது செல்வாக்கால் திரையுலகில் இருந்து பணியாற்ற விடாமல் ஓரங்கட்டும் போக்கு இன்னொரு பக்கம் என சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நிலவி வரும் அராஜக போக்கை வெளிச்சம் போட்டு காட்டியது.
இதை தொடர்ந்து நடிகைகள் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் சினிமா பிரபலங்கள் மீது தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் தொந்தரவுகள் குறித்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் சவுமியா சதானந்தன் என்கிற பெண் இயக்குனர் திரையுலகின் அதிகார வர்க்கத்தால் தனது டைரக்சன் பயணம் எப்படி முடங்கி போனது என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 2012ல் இருந்து சினிமாவில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய சவுமியா சதானந்தன் இரண்டு குறும்படங்களை இயக்கி விருதுகளையும் பெற்றவர். 2018ல் மாங்கல்யம் தந்துனானே என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். குஞ்சாக்கோ போபன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இவர் படம் எதுவும் இயக்கவில்லை. தற்போது இதற்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுமியா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது, “திரையுலகில் நாம் வெளியில் பார்க்கும் சில சோ கால்டு நல்ல மனிதர்கள் உள்ளே வேறொரு முகம் வைத்திருக்கிறார்கள். என்னுடைய முதல் படத்தின் படத்தொகுப்பை என் அனுமதியில்லாமலேயே படத்தின் நாயகனும் இணை தயாரிப்பாளர் ஒருவரும் சேர்ந்து செய்தார்கள். அதுமட்டுமல்ல முதல் படத்திற்குப் பிறகு ஏன் இத்தனை வருட இடைவெளி என நண்பர்கள், உறவினர்கள் ஏன் முகம் தெரியாதவர்கள் கூட கேட்கிறார்கள்.
முதல் படம் வெளியான பிறகு பத்து தயாரிப்பாளர்களிடம் கதை கூறினேன். அதில் எட்டு பேர் ஆண்கள். அவர்கள் வெவ்வேறு விதமான காரணம் கூறி எனக்கு வாய்ப்பு தர மறுத்து விட்டனர். இரண்டு பெண் தயாரிப்பாளர்கள் வெவ்வேறு சூழலால் படம் தயாரிக்க முடியவில்லை என்று கூறி ஒதுங்கி விட்டனர். இதற்கு காரணம் அந்தப் படத்தின்போது அதில் நடித்த ஒரு நடிகையின் அறைக்குள் நுழைந்து அந்த நடிகையை பணம் கொடுத்து படுக்கைக்கு அழைத்த ஒரு பவர் மனிதரை நான் தட்டிக் கேட்டது தான்” என்று கூறியுள்ளார்.
யார் அந்த பவர் மனிதர் என்கிற சலசலப்பு எழுந்துள்ள நிலையில், அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த குஞ்சாக்கோ போபன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு எனது பவர் குரூப் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் அடுத்தடுத்து வெளியான இந்த இருவரின் பதிவுகளையும் ஒப்பிட்டு விவாதித்து வருகிறார்கள்.