‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சமீபத்தில் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள திரையுலகில் அடுத்தடுத்து எழுந்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக மலையாள திரையுலகமே கலகலத்துப் போயுள்ளது. இந்த அறிக்கை வெளியானதுமே முதல் நபராக தனது குற்றச்சாட்டை பதிவு செய்தவர் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் தான்.
மலையாளத்தில் பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி கடந்த 2009ல் வெளியான பாலேரி மாணிக்கம் என்கிற படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக வந்தபோது இயக்குனரின் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானதாக குற்றம் சாட்டி காவல்துறையிலும் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் குறிப்பிட்டு இருந்த அந்த 'பாலேரி மாணிக்கம் ; ஒரு பத்திர கோலப்பதக்கத்தின்டே கதா' என்கிற படம் வெளியான சமயத்தில் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்தநிலையில் தற்போது இந்த படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. பொதுவாக பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்கள், சம்பந்தப்பட்ட நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டோ அல்லது படம் வெளியாகி 15, 20 வருடம் ஆனதை கொண்டாடும் விதமாகவோ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மம்முட்டியின் பிறந்தநாள் கூட சமீபத்தில் கடந்து சென்றது. ஆனால் அப்போது கூட இந்தப்படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல், சமீப நாட்களாக இந்த பாலியல் புகார் தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வெளிச்சம் பெற்ற இந்த பாலேரி மாணிக்கத்திற்கு கிடைத்த இலவச விளம்பரத்தை மனதில் வைத்து தற்போது இந்தப்படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்பது ஒரு ஆச்சர்யமான காரணம் தான்.