தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோ என்கிற அடைமொழியுடன் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வலம் வருபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன். சமீபத்தில் இவரது நடிப்பில் ஆபீஸர் ஆன் டூட்டி என்கிற திரைப்படம் வெளியானது. பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் ஒரு வித்தியாசமான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி படமாக மாறி உள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் குஞ்சாக்கோ போபன்.
அந்த வகையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் குஞ்சாக்கோ. மேடையின் கீழ் நின்ற கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தனது செல்போனில் இருந்த புகைப்படத்தை குஞ்சாக்கோ போபனிடம் காட்டி 27 வருடங்களுக்கு முன்பு உங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று கூறியதும் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போன குஞ்சாக்கோ போபன் அவரது செல்போனை வாங்கி அந்த புகைப்படத்தை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார்.
அது மட்டுமல்ல அந்தப் பெண்ணை மேடை ஏறி வரச் செய்து அவருடனும் இணைந்து தனது செல்போனிலேயே ஒரு செல்பியும் எடுத்து அந்த ரசிகைக்கு இன்னும் கூடுதல் கவுரவத்தையும் அத்தனை பேர் மத்தியில் கொடுத்தார் குஞ்சாக்கோ போபன். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.




