இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' படத்தையும், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தையும் தயாரித்து வருகிறது. மேலும் ஏராளமான படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சில மோசடி நிறுவனங்கள் சினிமா ஆசை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக நடத்துகிறது.
இது குறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகளை எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்ததும், இது தொடர்பாக அறிக்கை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.