ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகத் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார். அதனால் இந்தியாவுக்கான 50 கிலோ எடை பிரிவில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் கண்டிப்பாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத்தை ஒலிம்பிக் குழுவினர் தகுதி நீக்க செய்தார்கள். இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிரவிட்டது. இதையடுத்து வினேஷ் போகத் கீழே விழுந்து அழுத புகைப்படங்கள் வெளியானது. அதைப்பார்த்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் அவருக்கு ஆறுதலாக பதிவு வெளியிட்ட நிலையில், பல சினிமா பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் தனது சோசியல் மீடியாவில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், தலை நிமிர்ந்து நடந்து வாருங்கள் போராளியே . உங்களுடைய மதிப்பு வெற்றிகளால் அழைக்கப்படுவது அல்ல. சாதனைகளை எல்லாம் முறியடிப்பதற்கான அன்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கூறி இருக்கிறார் நயன்தாரா.