ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ராஷ்மிகா, தென்னிந்திய அளவில் வரவேற்பை பெற்றதுடன் அடுத்து நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் அளவிற்கு பாலிவுட்டிலும் கால் பதித்தார். கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இணைந்து நடித்த ராஷ்மிகா அந்த படத்தின் மூலம் ஹிந்தியில் முதல் வெற்றியை ருசித்தார். இந்த நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் தயாராகி வரும் சவ்வா என்கிற படத்தில் விக்கி கவுசலுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
சத்ரபதி சிவாஜியின் கதையை தழுவி வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் மராத்திய வசனங்கள் நிறைய இடம்பெறுகின்றன. இதற்காக நாயகன் விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே தெளிவான மராத்தி உச்சரிப்புடன் படப்பிடிப்பில் வசனம் பேச வேண்டும் என்பதற்காக நான்கு வாரங்கள் மராத்திய மொழி பேசும் பயிற்சியை பெற்றுள்ளனர். குறிப்பாக ராஷ்மிகாவிற்கு படத்தில் நீளமான வசனங்கள் மராத்தியில் பேச வேண்டி இருப்பதால் அதில் மொழி வித்தியாசம் எதுவும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் உடேகர் இந்த பயிற்சியை எடுக்க வேண்டும் என கூறிவிட்டாராம்.