தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நடிகர் அர்ஜூன் கடந்த சில வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என கிட்டத்தட்ட கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாள திரை உலகில் இருந்தும் அர்ஜூனுக்கு அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து திலீப்புடன் ஜாக் டேனியல், மோகன்லாலுடன் வரலாற்று படமான மரைக்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார் அர்ஜூன்.
தற்போது புலனாய்வு திரில்லர் படமாக உருவாகியுள்ள விருன்னு (தமிழில் 'விருந்து') என்கிற படத்தில் கதையின் நாயகனாகவே நடித்துள்ளார் அர்ஜூன். இந்த படத்தை கண்ணன் தாமரக்குளம் இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த படம் வெளியாவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூனுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் முக்கிய வேடங்களில் ஆஷா சரத், முகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.




