நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் | டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரது தாய்மொழியான மலையாளத்தை விட தமிழில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். அவரது 75வது படமாக 'அன்னபூரணி' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், ஜெய் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தியேட்டர் வெளியீட்டில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் கடந்த வருடக் கடைசியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமர் அசைவ உணவு சாப்பிட்டார்,” என்று படத்தில் இடம் பெற்ற வசனம்தான் அந்த சர்ச்சைக்குக் காரணம். தொடர்ந்து ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக படக்குழுவினர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டது. அடுத்து நடிகை நயன்தாராவும் அது குறித்து மன்னிப்பு கேட்டார். அதனால், அப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
இதனிடையே, 'அன்னபூரணி' படம் இந்தியா தவிர மற்ற வெளிநாடுகளில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் தங்களது ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியாக உள்ளதாக 'சிம்ப்ளி சவுத்' என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.