சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹலிதா ஷமிம். இவர் தற்போது இயக்கியுள்ள படம் 'மின்மினி'. இந்தப் படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா இசையமைத்துள்ளார். வருகிற 9ம் தேதி இந்த படம் வெளி வருகிறது.
பள்ளி நட்பை அடிப்படையாக கொண்டு தயாராகும் இந்த படத்தில் பள்ளிப் பருவ நண்பர்களாக பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் நடித்துள்ளனர். பள்ளி பருவகாலம் முடிந்து வாலிப வயது அடைந்ததும் நண்பனுக்காக இவர்கள் இருவரும் செல்லும் ஒரு பயணமே படத்தின் கதை.
2016 ஆம் ஆண்டு துவங்கும் இந்த கதை 2024ம் ஆண்டு முடிவடைகிறது. பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் இருவரும் 8 வருடங்கள் காத்திருந்து பின்னர் தங்கள் வாலிப வயது கேரக்டரில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முதலாக இப்படியான ஒரு காத்திருப்பு நடந்ததில்லை என்கிறார்கள்.