குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 8வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது சந்தேகம் தான் என இரண்டு தினங்களுக்கு முன்புதான் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். நேற்று கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து 'சிறிய பிரேக்' எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த சீசனுக்கு அவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த சீசனுக்கு மீண்டும் வருவாரா என்பது அப்போதுதான் தெரிய வரும்.
இந்த 8வது சீசனில் கமல்ஹாசன் இல்லை என்பது உறுதியான உடனேயே அவரது இடத்தில் யார் வருவது சரியாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஆரம்பித்துவிட்டார்கள். 2022ம் ஆண்டில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற நிகழ்ச்சியை சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். முதலில் கமல்ஹாசன்தான் அதை தொகுத்து வழங்கினார். ஆனால், 'விக்ரம்' படத்தின் வேலைகளால் இரண்டு வாரங்களுடன் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார் கமல். பின்னர் மூன்றாவது வாரத்திலிருந்து சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். ஒரே ஒரு சீசனுடன் அந்த 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சி நின்று போனது.
அதனால், டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'பிக் பாஸ் 8' நிகழ்ச்சியை 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் முன் அனுபவத்தில் சிலம்பரசன் தொகுத்து வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்களாம். இருந்தாலும் மற்ற நடிகர்கள் தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என சில நடிகர்களின் பெயர்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
இருப்பினும் சீசன் 8ன் தொகுப்பாளர் யார் என்பது இந்நேரம் முடிவு செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக விலகல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த புதிய தொகுப்பாளர் யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்பதே இப்போதைய தகவல்.