ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
ஹாலிவுட்டின் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தவை 'அவெஞ்சர்ஸ்'. அந்த சீரிஸில் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' ஆகிய படங்களை இயக்கியவர்கள் ரூசோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் ஆண்டனி ரூசோ, ஜோசப் ரூசோ'. அவர்கள் அடுத்து 'அவஞ்சர்ஸ் டூம்ஸ்டே' இயக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதில் தமிழ் நடிகரான தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக திரையுலகில் ஒரு தகவல் பரவியுள்ளது.
ரூசோ பிரதர்ஸ் இயக்கிய 'தி கிரே மேன்' படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால், அவர் 'அவெஞ்சர் டூம்ஸ்டே' படத்தில் நடிக்க ரூசோ பிரதர்ஸ் சார்பில் பேசி வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்தத் தகவல் வெறும் வதந்தியா அல்லது உண்மையிலேயே பேச்சு வார்த்தை நடந்து வருகிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும். அப்படி தனுஷ் நடித்தால் சர்வதேச அளவில் அவர் இன்னும் பிரபலமடைவார்.