பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சின்னத்திரை விருது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சின்னத்திரை 2023ம் ஆண்டிற்கான விருது விழா அண்மையில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது.
இதனையடுத்து விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் திருச்செல்வம், 'எல்லோருடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது தான் எதிர்நீச்சல். கோலங்கள் தொடருக்கு பின் எனக்கு இந்த வாய்ப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த தொடர் இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க காரணம் இந்த தொடருக்கு வசனம் எழுதிய ஸ்ரீவித்யா தான்' என கூறினார். அதன்பிறகு தொகுப்பாளர் அர்ச்சனா எதிர்நீச்சல் 2 வருமா? என கேட்க, அதற்கு பதிலளித்த திருச்செல்வம் 'எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும், எப்பொழுதும் இருக்கும்' என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.