பாலிவுட்டின் டாப் வசூல் நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவருடைய மகன் ஆர்யன் கான் தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். சமீபத்தில் தெற்கு டில்லி பகுதியில் உள்ள பன்ச்ஷீல் பார்க் என்ற இடத்தில் ஆர்யன் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவற்றின் மதிப்பு 37 கோடி ரூபாயாம்.
அந்த இடத்தில்தான் ஆர்யனின் பெற்றோர் ஷாரூக்கான், கவுரி ஆகியோர் ஒரு காலத்தில் வசித்துள்ளார்கள். அந்த இடத்தில் ஏற்கெனவே அவர்களுக்கு 27 ஆயிரம் அடி சதுர பரப்பில் வில்லா வீடு ஒன்றும் உள்ளதாம். 2001ல் சுமார் 13 கோடி ரூபாய்க்கு அந்த வீட்டை வாங்கியுள்ளார்கள்.
பெற்றோர் வசித்த இடத்தில் தனக்கும் வீடு வேண்டும் என்பதற்காக ஆர்யன் அந்த இடத்தை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். கடந்த மே மாதம் 2024ல் பத்திரப் பதிவு நடந்துள்ளதாகவும், அதற்கான கட்டணமாக 2.64 கோடி செலுத்தியுள்ளார் ஆர்யன் என்றும் செய்திகள் வந்துள்ளன.
ஷாரூக்கான், கவுரி இருவரும் டில்லியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். டீன் ஏஜ் வயதிலேயே இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஷாரூக், இந்து மதத்தைச் சேர்ந்த கவுரி இருவரும் பல எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது இந்திய சினிமாவின் டாப் தம்பதிகளில் ஒருவராக உள்ளனர்.