'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஷ்னோவா நேற்று திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி, நேற்றைய அன்னதான செலவையும் ஏற்றுக் கொண்டார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசனம் செய்வதற்கு அவர்கள் 'நம்பிக்கை உறுதி ஆவணம்' ஒன்றில் கையெழுத்திட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூரில் படித்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் காயமடைந்து குணமடைந்து வருகிறார். அதற்காக திருப்பதி சென்று முடி காணிக்கை, அன்னதானம் செய்த அன்னா, நம்பிக்கை உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்ட பின்பு பெருமாளை தரிசனம் செய்துள்ளார்.
அவர் அப்படி செய்ததற்கு பக்தர்கள் பாராட்டி வருகிறார்கள். இதற்கு முன்பு ஆந்திர மாநில முதல்வராக இருந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி சென்ற போதெல்லாம் அவர் பெருமாளை தரிசனம் செய்ததில்லை. நம்பிக்கை உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு செல்வதைத் தவிர்க்கவே அவர் அப்படி செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான பக்தர்கள் ஜெகன்மோகன் ரெட்டியையும், அன்னாவையும் ஒப்பிட்டு, அன்னாவைப் பாராட்டி வருகிறார்கள்.