ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு |
2015ம் ஆண்டில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' என்ற படத்தில் இயக்குனர் ஆனவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பிறகு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி' போன்ற படங்களை இயக்கியவர், கடைசியாக அஜித் நடிப்பில் 'குட் பேட் அக்லி' என்ற படத்தை இயக்கினார். கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் 100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அஜித்குமார் இப்படத்தில் கேங்ஸ்டராக செம மாஸ் காட்டி நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் ஆரவாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் வெற்றி செய்தியை அஜித்துக்கு தெரியப்படுத்திய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அவர் ஒரு முக்கிய அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அது குறித்து அவர் கூறுகையில், ''குட் பேட் அக்லி படம் ஹிட் ஆயிடுச்சு. பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கப் போகிறது. என்றாலும் இது அத்தனையும் மறந்து விடு. வெற்றியை தலையில் ஏற்றி கொள்ளாதே. அதே மாதிரி தோல்வியை உன் வீட்டுக்கு எடுத்து செல்லாதே. எல்லாத்தையும் மறந்து விட்டு அடுத்த வேலையை பாரு'' என்று தனக்கு அஜித்குமார் அட்வைஸ் கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.