கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
கடந்த 1998ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் மீது மான்வேட்டை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து பிஷ்னோய் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் கருப்பு நிற மான்களை சல்மான்கான் வேட்டையாடியதால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அதே போன்று மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக மும்பை போலீசில் தெரிவித்திருக்கும் சல்மான்கான், தனது குடும்பத்தாரை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.