'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் வெகு சிலர் தங்களிடம் உள்ள குறைபாட்டை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்தி பல சமயங்களில் ஒப்புக்கொள்வதை பார்த்துள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் சமீபத்தில் ஜெட்டாவில் நடைபெற்ற செங்கடல் திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்டபோது நான் ஒன்றும் மிகச்சிறந்த நடிகர் இல்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அந்த நிகழ்வில் சல்மான்கான் பேசும்போது, அவரிடம் அவரது நடிப்பு ஸ்டைல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்த தலைமுறையில் நடிப்பு என்பது எப்போதோ ஒதுங்கி விட்டது. என்னை எப்போதுமே சிறந்த நடிகர் என்று நான் நினைத்துக் கொண்டதில்லை. நீங்கள் என்னிடம் இருந்து எதையும் செய்யச் சொல்லி பெற்று விட முடியும். ஆனால் என்னை நடிக்க வைப்பது உங்களால் முடியாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறேன். சில நேரங்களில் நான் ஒரு காட்சியில் அழுதால் நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்து சிரிப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.