பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட திறமையாளராக வலம் வருகிறார் நடிகர் பிரித்விராஜ். கடந்த 10 வருடங்களில் மலையாள திரையுலகம் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை படங்களில் மாறி மாறி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது டைரக்ஷனில் மோகன்லால் நடிப்பில் 'எம்புரான்' திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க இருக்கிறார் பிரித்விராஜ். அதில் பிரித்விராஜ் - பார்வதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் உருவாகும் 'தாய்ரா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரித்விராஜ். கதாநாயகியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். 'ராசி, தல்வார், சாம் பகதூர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பெண் இயக்குனர் மேக்னா குல்சார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து கரீனா கபூர் கூறும்போது, “பொதுவாக நான் இயக்குனர்களின் நடிகை தான்.. ஆனால் இந்த படத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதற்காகவே ஆர்வமாக ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
அதேபோல நடிகர் பிரித்விராஜ் இந்த படம் பற்றி கூறும்போது, “சில கதைகள் நீங்கள் கேட்ட நாளிலிருந்து உங்கள் மனதிற்குள்ளேயே தங்கி இருக்கும். தாய்ரா அப்படிப்பட்ட ஒரு கதை தான்.. மேக்னா குல்சார், கரீனா கபூர் மற்றும் ஜங்கிள் பிக்சர்ஸுடனும் இணைந்து பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.