கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படம் வெளியானது. இயக்குனர் விபின்தாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் கதாநாயகனாக இயக்குனர் பஷில் ஜோசப் மற்றும் கதாநாயகியாக தர்ஷனா ராஜேந்திரன் நடித்து இருந்தனர். படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என விரும்பும் இளம்பெண் ஒருவர் பெற்றோரின் கட்டாயத்தால் அதிகம் படிக்காத கிராமத்து இளைஞன் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். தன் வீட்டிற்கு வந்ததிலிருந்து இளம்பெண் மீது பழமைவாத அடக்கு முறையை அந்த இளைஞர் மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் வெகுண்டெழும் அந்த இளம்பெண் தற்காப்பு கலையாக கராத்தே கற்றுக்கொண்டு தனது கணவனை சமாளித்து எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பது தான் கதை.
இந்த படம் பெண்களுக்கான ஒரு உற்சாக தூண்டுதல் அளிக்கும் விதமாக அதே சமயம் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியான சில நாட்களுக்கு பின் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த படத்தை பார்த்துவிட்டு இதன் இயக்குனரை ரொம்பவே சிலாகித்து பாராட்டினார். அதன்பிறகு விபீன்தாஸ் அமீர்கானை நேரிலேயே சந்தித்தார். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை அமீர்கானே தயாரிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அசீஸ் நெடுமங்காடி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “அமீர்கான் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரிக்க ரொம்பவே ஆர்வமாக இருந்தார். இந்த கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ஆனால் மலையாள படத்தில் நடித்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி பாலிவுட்டில் பொருத்தமான நட்சத்திரங்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மலையாளத்தில் நடித்தவர்களை கூட இங்கே நடிக்க வைக்கலாமா என்கிற யோசனையும் கூட செய்தார்கள், ஆனால் முழுமையான நட்சத்திர தேர்வு இந்த படத்திற்கு அமையாமல் போனதால் ஒரு கட்டத்தில் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.