அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
மலையாள நடிகை மஞ்சு வாரியர் தற்போது மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், வேட்டையன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதேபோல மலையாளத்தில் அவர் நடித்துள்ள புட்டேஜ் என்கிற திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. பவுண்ட் புட்டேஜ் த்ரில்லர் ஆக உருவாகி இருக்கும் இந்த படத்தை அஞ்சாம் பாதிரா, கும்பலாங்கி நைட், மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஷைஜு ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். மஞ்சு வாரியர் தவிர விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் மஞ்சு வாரியர் ஒரு ஹோட்டல் காரிடார் ஒன்றில் நின்றபடி யாரோ ஒருவருடன் மொபைல் போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க அங்கு வரும் ஆண், பெண் இளம் ரிப்போர்ட்டர் இருவர் மஞ்சுவாரியரை பார்த்ததும் அனுமதி இல்லாமலேயே அவரது முகத்திற்கு நேராக மைக்கை நீட்டி கேள்விகள் கேட்க துவங்குவதும், ஒருவர் மஞ்சுவாரியரை புகைப்படம் எடுப்பதும் மொபைல் போன் பேசிக்கொண்டே மஞ்சு வாரியர் அவர்களை தடுப்பதுமாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இது நிஜ வீடியோ அல்ல. புட்டேஜ் படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல மஞ்சுவாரியரை தொந்தரவு செய்யும் ரிப்போர்ட்டர்களாக படத்தில் நடித்துள்ள விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் தான் இந்த புரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரமோஷனுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்.