2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
இரண்டாம் பாகங்கள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகும் அளவிற்கு சில இரண்டாம் பாகப் படங்களின் 'ரிசல்ட்' அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'இந்தியன் 2' படத்தின் வசூல், லாபமா, நஷ்டமா என்பது இன்னும் சில நாட்கள் கழித்துத்தான் தெரியும். ஆனால், விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறாமல் போனது 'இந்தியன் 2' என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
அந்தப் படத்தை வைத்து கடந்த சில நாட்களில் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்கள், பல கருத்துக்கள், பல கமெண்ட்கள் வந்தன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில இரண்டாம் பாகப் படங்கள் முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது மோசமாக அமைந்ததே அதற்குக் காரணம்.
இதற்கு முன்பாக வெளிவந்த “ஜப்பானில் கல்யாணராமன், குரோதம் 2, நான் அவன் இல்லை 2, பில்லா 2, பீட்சா 2, ஜெய்ஹிந்த் 2, பசங்க 2, புலன் விசாரணை 2, மணல் கயிறு 2, கோ 2, ஜித்தன் 2, டார்லிங் 2, சென்னையில் ஒரு நாள் 2, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, '2.0', சண்டக்கோழி 2, சாமி ஸ்கொயர், விஸ்வரூபம் 2, தமிழ் படம் 2, கோலி சோடா 2, கலகலப்பு 2, திருட்டுப் பயலே 2, வெண்ணிலா கபடி குழு 2, களவாணி 2, தேவி 2, நீயா 2, உரியடி 2, சித்திரம் பேசுதடி 2, தில்லுக்கு துட்டு 2, சார்லி சாப்ளின் 2, அடுத்த சாட்டை 2, நாடோடிகள் 2, சிவி 2, ஜிவி 2, மேதகு 2, பொன்னியின் செல்வன் 2, பிச்சைக்காரன் 2, தலைநகரம் 2, அவள் அப்படித்தான் 2, சந்திரமுகி 2,” என இதுவரையில் வந்த இத்தனை இரண்டாம் பாகப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றித்தான் உள்ளன. இதில் ஒரு சில படங்கள் தலைப்பை மட்டுமே பயன்படுத்திய படங்கள்.
இன்னும் பல இரண்டாம் பாகப் படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. சில படங்கள் அறிவிப்பில் இருக்கின்றன. அதன்படி “டிமான்டி காலனி 2, சூதுகவ்வும் 2, விடுதலை 2” ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ள சில படங்கள். 'சர்தார் 2, சார்பட்டா பரம்பரை 2, துப்பறிவாளன் 2, 7 ஜி ரெயின்போ காலனி 2, தனி ஒருவன் 2 ' ஆகிய படங்கள் சில அறிவிப்பிலும், சில தயாரிப்பிலும் இருக்கின்றன.
வரும் காலங்களில் 'கங்குவா 2, கைதி 2, தீரன் அதிகாரம் ஒன்று 2, விக்ரம் 2, ஜெயிலர் 2' ஆகியவை வரலாம்.
பேயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அரண்மனை' படம் 4 பாகங்கள் வரையில் வந்த பிறகு சில முக்கிய படங்களின் இரண்டு பாகங்கள் மட்டும் போதுமா, அடுத்தடுத்து 3, 4 என வர வேண்டாமா என சில ரசிகர்கள் அதற்கடுத்த பாகங்களையும் எதிர்பார்ப்பது வேறு விஷயம்.