'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாபி சிம்ஹா வில்லனாக நடித்த ‛மெட்ரோ' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். அதை தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிளடி மணி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலியான ஹஸ்னா என்பவருக்கும் சமீபத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் மணமேடையில் மணமக்களுக்கு சிம்பு கூறிய அறிவுரை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வில் சிம்பு பேசும்போது, “மணமகன் சிரிஷ் தான் கரம் பிடித்துள்ள பெண்ணை அவரது வீட்டில் அவரது தந்தை எப்படி அன்பு செலுத்தி கவனித்து இருப்பாரோ அதேபோன்று அன்பை செலுத்த வேண்டும். அதேபோல மணப்பெண்ணும் தனது தந்தை மீது எந்த அளவிற்கு அன்பும் மரியாதையும் செலுத்துவாரோ அதேபோல தனது கணவனுக்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.