சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கன்னட சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகை அபர்ணா வஸ்த்ரே. மாசனாட கூவு, சங்ரம்மா, நம்மோர ராஜா, இன்ஸ்பெக்டர் விக்ரம், டாக்டர் கிருஷ்ணா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அபர்ணா வஸ்த்ரேவுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அபர்ணா வஸ்த்ரே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.
அபர்ணா வஸ்த்ரே மறைவுக்கு கன்னடன திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முதல்வர் சித்தாராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'பன்முக திறமை கொண்ட அபர்ணா மரணம் அடைந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.




