ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அந்தப் படத்தில் அரவிந்த்சாமிக்கான சம்பளத்தில் தர வேண்டிய பாக்கித் தொகை 30 லட்சம், வருமான வரித்துறைக்கு தயாரிப்பாளர் செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகை 27 லட்சம், பெற்ற கடன் தொகை 35 லட்ச ரூபாய் ஆகியவற்றைத் தயாரிப்பாளர் அளிக்கவில்லை என அரவிந்த்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தயாரிப்பாளர் முருகன் குமாரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் வழக்கை ஜுலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் அரவிந்த்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தயாரிப்பாளர் எங்களிடம் தீர்வுக்காக அணுகியுள்ளார். நீங்கள் எங்களுக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதைத் தீர்க்க முடிகிறதா என்று பார்ப்போம்,” என்று நீதிபதியிடம் கேட்டார்.
அவரது கோரிக்கைக்கு சம்மதித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.