ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‛கல்கி 2898 ஏடி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரிய அளவில் வசூலித்தும் வருகிறது. கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் தென்னிந்திய திரை உலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் மலையாளத்தில் ஹெலன் என்கிற படம் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமான நடிகை அன்னா பென் இந்த படத்தில் கைரா என்கிற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது படம் வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் நாக் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த படப்பிடிப்பின் போது சில காட்சிகளில் தனக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறி அதுகுறித்த புகைப்படங்களையும் பதிந்துள்ளார் அன்னா பென். மேலும் எனது திரையுலக பயணத்தில் கல்கி ஒரு மைல்கல் படமாக அமைந்துவிட்டது. என் மீது நம்பிக்கை வைத்து அழைத்த இயக்குனர் நாக் அஸ்வினுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார் அன்னா பென்.