லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை அன்னா பென். 'கொட்டுக்காளி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தில் சூரி கதையின் நாயகன். நாயகி அன்னா பென். கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த இந்த படம் வருகிற 23ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தில் நடித்திருப்பது குறித்து அன்னா பென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
‛‛மீனா ( படத்தில் கேரக்டர் பெயர்) என்னுள் ஒரு அங்கம் என்பது நான் அறிந்ததே இல்லை, பல அற்புதமான விஷயங்களில் கொட்டுக்காளி ஒரு வெளிப்பாடு. இந்த கொட்டுக்காளி எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாளோ, அதேபோல் வலிமையும், நெகிழ்ச்சியும் உடையவளாக இருப்பாள். அவள் மூலமாக மதுரை வழியாக இந்த பயணத்தில் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.