
பிளாஷ்பேக் : ராதாகிருஷ்ணன் பெயரில் காக்கா வந்தது எப்படி?
"மங்கையர்க்கரசி" படத்தில் ராதா கிருஷ்ணன் நடிக்கும் போது அந்தப் படத்தில் அவரது அம்மா மன்னரை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக அவரை "காக்கா புடிடா காக்கா புடிடா" என்று வற்புறுத்திக் கொண்டே இருப்பார். இதை தவறாக புரிந்து கொள்ளும் ராதா கிருஷ்ணன் பல நாட்கள் அலைந்து திரிந்து நிஜமாகவே ஒரு காக்காவை பிடித்துக் கொண்டு வந்து தனது அம்மாவிடம் கொடுப்பார். "போடா மடப்பயலே... மகாராஜாவைக் காக்கா புடிடான்னா.... நிஜக் காக்காவைப் புடிச்சிட்டு வந்திருக்கியே"னு திட்டுவார்.
இந்த காமெடி காட்சி அப்போது மிகவும் பிரபலம். இந்தக் காட்சியைப் பார்த்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ராதா கிருஷ்ணணை "காக்கா ராதாகிருஷ்ணன்"னு கூப்பிட ஆரம்பித்தார். பின்னர் அதுவே பெயராகிவிட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!