கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! |
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தையும் தாண்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக மாறி நடித்து வருகிறார். அதே சமயம் அவர் எப்போதுமே தனது நட்பு வட்டாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை செலவிடுவதிலும் தயங்காதவர். அவ்வப்போது இவர் தோழிகளின் வீட்டு விசேஷங்களிலும் அவர்களுடன் சுற்றுலாக்களிலும் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாவதை பார்க்க முடியும். இந்த நிலையில் அப்படிப்பட்ட நெருங்கிய தோழிகளில் ஒருவரான மனீஷா என்பவர் சமீபத்தில் பிரைன் டியூமர் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவினார். இதுகுறித்து சமீபத்தில் அவரது பிறந்தநாள் அன்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
அதில் அவர் கூறும்போது, “21 வயதில் பிரைன் ட்யூமர் நோய்க்காக டயக்னைஸ் செய்ய ஆரம்பித்து கடந்த எட்டு வருடங்களாக நோய்க்கு எதிராக அவள் போராட்டம் நடத்தி வந்தாள். ஒரு நாள் அவளை மருத்துவமனையில் சந்தித்தபோது என்னால் தாங்க முடியவில்லை என்றாலும் அவள் முன்பாக எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறினேன், கடைசியாக அவளை நான் சந்தித்தபோது சுயநினைவின்றி இருந்தாள். அதன் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை. எனக்கு தோன்றும் ஒரு கேள்வி என்னவென்றால், இதுபோன்ற ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பே, அவர் இந்த உலகத்தை முழுதுமாக பார்ப்பதற்கு முன்பே, அவளுடைய விருப்பங்கள் கனவுகள் எதுவுமே நிறைவேறாததற்கு முன்பே எதற்காக இப்படி நடக்க வேண்டும் ? எனக்கு இப்போதும் விடை தெரியவில்லை. நீ இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டாலும் கூட தினசரி உன்னை பற்றி நினைவு வராத நாளே இல்லை” என்று உருக்கமாக கூறியுள்ளார்.