ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் திரிஷா, தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக 'விஷ்வம்பரா' படத்திலும், தமிழில் அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி' படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கம் 'தக் லைப்' படத்திலும், மலையாளத்தில் 'ராம்' படத்திலும் நடித்து வருகிறார்.
திரிஷா முதன்முதலாக நடித்த தெலுங்கு வெப் சீரிஸ் 'பிருந்தா' ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
திரில்லர் வெப் சீரிஸ் ஆக உருவாகியுள்ள இதில் திரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ஆம்னி மற்றும் பலர் இதில் நடித்துள்ளார்கள்.