சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வரும் நடிகர் தர்ஷன், தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி டார்ச்சர் செய்த தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு 6106 என்கிற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண் தற்போது வெளியில் கசிந்து அவரது ரசிகர்கள் பலரும் இதனை தங்களது உடலில் டாட்டூவாக குத்திக்கொண்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிக் கொண்டும் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சில திரைப்பட இயக்குனர்கள் இந்த கைதி எண்ணை தங்களது திரைப்படத்திற்கு டைட்டிலாக பதிந்து வைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறிய குழந்தை ஒன்றுக்கு இந்த கைதி எண் பொறிக்கப்பட்ட கைதி டிரஸ் ஒன்று அணிவிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதில் தர்ஷனை குறிப்பிடும் விதமாக தி பாஸ் என்கிற வார்த்தையும் எழுதப்பட்டுள்ளது.
என்னதான் நடிகர் மீது அபிமானம் என்றாலும் தங்களது குழந்தைக்கு தற்போது சிறையில் இருக்கும் ஒரு கைதியின் எண் கொண்ட உடையை அணிவிப்பது எல்லாம் தவறான முன்னுதாரணம் என்றும் இந்த புகைப்படத்தை பதிவிட்டவர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது.