ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் |
நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இதன் விஎப்எக்ஸ் பணிகளுக்காக சமீபத்தில் அமெரிக்கா கிளம்பி சென்றிருந்தார் வெங்கட்பிரபு. அதேபோல நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய மகாராஜா படம் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுவதை முன்னிட்டு அவரும் அமெரிக்கா சென்று உள்ளார்.
அதுமட்டுமல்ல நடிகர் சூரியும் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் தான் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வெங்கட்பிரபு இவர்கள் இருவரையும் அமெரிக்காவில் தனித்தனி நிகழ்வுகளின்போது சந்தித்துள்ளார். அப்போது இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.