2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு | நயன்தாரா ஒரு சொகுசு பூனை: சுசித்ரா தாக்கு | படம் பிடிக்காமல் பாதியில் வெளியேறினால் பாதி கட்டணம் திருப்பித் தரப்படும்: புதிய திட்டம் அறிமுகம் | ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டம் | பத்திரிகையாளர் மீது தாக்குதல் : மோகன் பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு | பிளாஷ்பேக் : தயாரிப்பாளரை டைட்டில் கார்டில் நக்கலடித்த கே.பாக்யராஜ் |
மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான 'அம்மா' பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டிருந்த பவுன்சர்கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் பத்திரிகையாளர்களை நுழைய விடாமல் தடுத்ததுடன், அவர்களை வெளியே கொட்டும் மழையில் காத்திருக்க வைத்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்திற்கு தற்போது புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சித்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அம்மா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது பத்திரிக்கையாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் விதமாக சில நிகழ்வுகள் நடந்தது. இதற்கு நானே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னுடைய அஜாக்கிரதையால் தான் இது நடந்தது. சில சொந்த காரணங்களால் நான் அவசரமாக அந்த அரங்கை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. அதனாலேயே பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சங்கடம் நிகழ்ந்தது. அவர்களிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இதுபோன்று ஒரு நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று உறுதியும் அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் நடிகர் சித்திக்.