பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி புகைப்பட ஆர்வலர் எங்கு சென்றாலும் தன்னுடன் கேமராவை எடுத்துச் செல்வது வழக்கம். தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில் கேரளாவில் பறவைகள் நிபுணரான கே.கே.நீலகண்டன் நூற்றாண்டு விழாவையொட்டி எர்ணாகுளத்தில் நடந்த கண்காட்சியில் பல்வேறு அரிய பறவைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. அதில் மம்முட்டி எடுத்த 'புல் புல்' என்ற சிறிய பறவை ஒன்றின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. ஒரு சிறிய இலையின் விழிம்பில் 'புல் புல்' அமர்ந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
பின்னர் இந்த படம் ஏலம் விடப்பட்டது. இதனை தொழில் அதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் 3 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகை ஒரு பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தை தான் கட்டிவரும் 3 நட்சத்திர ஓட்டலின் வரவேற்பு கூடத்தில் பெரிதாக வைக்கப்போவதாக அச்சு உல்லட்டில் தெரிவித்தார்.




