நாளை ஜூலை 5 முதல் 'கூலி' படப்பிடிப்பு | மகாராஜா - விஜய் சேதுபதியின் முதல் 100வது படம் | இந்தியன் 2 கதை இந்தக் காலத்திற்கும் பொருந்தும் - ஷங்கர் | 'சலார்' வசூலைக் கடந்த 'கல்கி 2898 ஏடி' | கல்யாணக் கேள்விகள் : எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன் | ஆகஸ்ட்டில் வெளியாகும் 'டிமான்டி காலனி 2' | 'சட்னி - சாம்பார்' சீரிஸின் டீசர் வெளியானது : விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு | தாய்மொழியில் பேசிய ராஷ்மிகா : குழம்பிப்போன ரசிகர்கள் | திலீப்பின் மூன்று படங்களையும் கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து பண மோசடி சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஎக்ஸ் தயாரிப்பாளர் |
ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய அட்லி அதையடுத்து அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து அப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சல்மான்கான் நடிப்பில் தனது புதிய படத்தை அட்லி இயக்குவதாக பின்னர் செய்திகள் வெளியாகின. அதோடு அந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக ரஜினிகாந்தை நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால், சல்மான்கான் நடிக்கும் அந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க கமல்ஹாசனிடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஒருவேளை அப்படத்தில் நடிக்க ரஜினி மறுத்து விட்டதால் கமலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதுதான் ரஜினி, கமல் இருவரில் யார் நடிக்கிறார்கள்? என்ற உண்மை தெரியவரும்.