5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகின்ற ஜூலை 26ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியதால் இந்த படத்தின் விளம்பர பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜூலை 6ம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.