'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தி சினிமாவிற்குப் போட்டியாக தெலுங்கு சினிமா வளர்ந்து வருகிறது. அதற்கேற்ற விதத்தில் பிரம்மாண்டமான படங்களைக் கொடுத்து வசூலை அள்ளி வருகிறார்கள் தெலுங்குத் திரையுலகினர்.
கடந்த வாரம் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படமும் தற்போது 600 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகத்தைப் பொறுத்தவரை இது 5வது 600 கோடி படம். இதற்கு முன்பு, “பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், சலார், பாகுபலி 1” ஆகிய படங்கள் 600 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. 'கல்கி' படத்தின் வசூல் இன்னும் சில நூறு கோடிகளை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், '2.0, ஜெயிலர், லியோ' ஆகிய படங்கள் மட்டுமே 600 கோடி வசூலைக் கடந்த படங்களாக உள்ளன. ஹிந்தியில், “தங்கல், ஜவான், பதான், பஜ்ரங்கி பைஜான், அனிமல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார்', பிகே, கடார் 2, சுல்தான்” ஆகிய படங்கள் 600 கோடி வசூலைக் கடந்துள்ளன. கன்னடத்தில் 'கேஜிஎப் 2' படம் மட்டும் 600 கோடியைக் கடந்துள்ளது.
தமிழில் இந்த ஆண்டில் அடுத்து வர உள்ள சில படங்கள் 600 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக “இந்தியன் 2, தி கோட், வேட்டையன், கங்குவா,' ஆகிய படங்கள் அந்த சாதனையைப் பெறலாம்.