கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இன்றைய பல பிரம்மாண்டங்களுக்கு எப்போதோ அஸ்திவாரம் போட்டவர். அவருடைய பிரம்மாண்ட வழியைத்தான் இன்றைய பல தெலுங்கு, ஹிந்தி இயக்குனர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.
தமிழில் 'இந்தியன் 2' படத்தை முடித்துள்ள ஷங்கர் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருகிறார். 'இந்தியன் 2' படம் அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் நடைபெற வேண்டி உள்ளதாம். அதை முடித்த பின் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரலாம். அடுத்து 'இந்தியன் 3' படமும் வெளியாக உள்ளது.
இந்த படங்களின் வேலைகள் அடுத்த சில மாதங்களில் முடிந்துவிடும். அதற்கடுத்து என்ன மாதிரியான படங்களை இயக்க உள்ளேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சரித்திரக் கதை, ஜேம்ஸ் பான்ட் படம் மாதிரியான கதை, ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என மூன்று கதைகளை வைத்துள்ளாராம் ஷங்கர். ஆனால், மூன்று படங்களுமே அதிக பொருட்செலவில் எடுக்க வேண்டியுள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். அந்தப் படங்களில் அதிக விஎப்எக்ஸ் காட்சிகள், புதிய தொழில்நுட்பம் ஆகியவை இருக்கும் என்று கூறியுள்ளார்.