அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
முத்தமிழ் படைப்பகம் சார்பில் ஏ.ஜே.பிரபாகரன் தயாரிக்கும் படம் 'சிங்காநல்லூர் சிக்னல்'. அறிமுக இயக்குநர் ஜே.எம்.ராஜா இயக்குகிறார். பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஹரிசங்கர், ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. படம் பற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது : ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான பேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறோம். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை கோவையில் நடக்கிறது என்றார்.