அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சிறிய படங்களில் நடித்து வந்த இனியா 'வாகைசூடவா' படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு மவுனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், மாசானி, நான் சிகப்பு மனிதன், நான் கடவுள் இல்லை. பொட்டு உள்பட பல படங்களில் நடித்தார். சமீப காலகமாக அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் இல்லை. கடந்த 3 வருடங்களில் அவர் 'நான் கடவுள் இல்லை' படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நாயகியாக நடித்துள்ள 'சீரன்' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதனை ஜேம்ஸ் கார்த்திக் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து, நடித்துள்ளார். துரை கே.முருகன் இயக்கி உள்ளார். சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.