இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'எம்புரான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னொரு பக்கம் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் தனது 360வது படத்திலும் நடித்து வருகிறார் மோகன்லால். இந்த படத்தில் நீண்ட நாளைக்கு பிறகு அவருடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் மோகன்லாலின் தீவிரமான ரசிகை. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற அவருக்கு அதிர்ஷ்டவசமாக மோகன்லாலுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மோகன்லாலிடம் “படம் முடிஞ்சதா மகனே?” என்று கேட்டுள்ளார். அதற்கு மோகன்லால், “ஏன்.. எங்களை எங்கிருந்து வேகமாக அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று வேடிக்கையாக கேட்டுள்ளார்.
அதன் பிறகு அந்த மூதாட்டி, “எங்க வீட்டிற்கு சாப்பிட வருகிறீர்களா?” என்று கேட்க, “எனக்கு ஸ்பெஷலாக என்ன தருவீர்கள்?” என்று மோகன்லால் கேட்டதும் “வாத்து கறி சமைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார். நிச்சயமாக வருகிறேன் என்று கூறி அந்த மூதாட்டியின் தோள்மேல் கை போட்டபடி மோகன்லால் தனது குழுவினருடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.