எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
நேற்று முதல் கங்குவா படத்தின் எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு, தனுஷ்-நயன்தாரா விவகாரம் தான் ஊடகங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. தனுஷின் தயாரிப்பில் வெளியான நானும் ரெளடிதான் படம் தான் நயன்தாராவின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனையாக காதலையும் அவருக்கான வாழ்க்கை துணையையும் தேடிக் கொண்டு வந்தது. இது மறுக்க முடியாத ஒன்று. அப்படி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்ட பின் தன்னுடைய வாழ்க்கை குறித்த டாக்குமெண்டரியில் நான் நடித்த அத்தனை படங்களையும் விட நானும் ரவுடிதான் பட சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற நயன்தாரா விரும்பியதில் வியப்பொன்றுமில்லை.
ஆனால் அவர்கள் திருமண வீடியோ வெளியாவதற்கு இவ்வளவு தாமதமாக காரணமே படஹ்தின் தயாரிப்பாளரான தனுஷ், அந்த காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள தடையில்லா சான்று வழங்க தாமதப்படுத்தியதுதான் என்று தற்போது நயன்தாராவின் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல அதன் புரோமோவில் நானும் ரவுடிதான் காட்சிகளை 3 நொடிகள் பயன்படுத்தியதற்கே 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார் என்கிற புது தகவலும் நயன்தாரா மூலம் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல நட்பில் இருந்து வந்த இவர்களது நட்பில் எங்கே விரிசல் விழுந்தது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நயன்தாரா குறித்து தனுஷ் பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2013ல் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் புதிய பாதையையும் அமைத்துக் கொடுத்தது. அந்த படத்தில் இடம்பெற்ற லோக்கல் பாய்ஸ் என்கிற ஒரு பாடலுக்கு நயன்தாராவும் தனுஷும் சிறப்பு தோற்றத்தில் வந்து நடனம் ஆடி இருந்தனர்.
பின்னாளில் இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பேசும்போது, “இந்த படத்தில் பாடல் காட்சிக்காக வந்து நடித்துக் கொடுத்த நயன்தாரா ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.. கேட்டதற்கு நீ என் நண்பன் உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்வதற்கு எனக்கு உடன்பாடு இல்லை என்று பெருந்தன்மையாக கூறினார்” என்று சொல்லி இருக்கிறார்.
அந்த சமயத்திலும் நயன்தாரா கோடிகளில் தான் சம்பளம் வாங்கினார். அப்படி நட்புக்காக தனுஷுக்கு நயன்தாரா சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் நடித்த நிலையில் ஒரு 3 நொடி கிளிப்பிற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் எண்ணம் தனுஷுக்கு எப்படி வந்தது.. இந்த அளவிற்கு நன்றி மறந்தவரா தனுஷ் ? என சோசியல் மீடியாவில் பலரும் தனுஷை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.