என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

1996ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' படம் பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை (ஜூன் 1) மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடக்கிறது. இதில் ரஜினி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் இமயமலை சென்று விட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது. என்றாலும் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ் குமார், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தியன் தாத்தா சேனாதிபதி பயன்படுத்தும் கத்தியின் சாயலில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. விழாவிலும் இதுபோன்ற எதிர்பாராத ஆச்சர்யங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.