இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் | ''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் |

சின்னத்திரை நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருக்கும் விஜய் ஆதிராஜ் 2013ம் ஆண்டு புத்தகம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்தார். தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக தமிழுக்கு வந்தார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு விஜய் ஆதிராஜ் படம் இயக்கவில்லை. சின்னத்திரைக்கே திரும்பினார்.
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். படத்தின் டைட்டில் 'நொடிக்கு நொடி'. இதில் 'செம்பி' புகழ் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் ஆகியோர் நடிக்கிறார்கள். நாக்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் ஆரோக்கியதாஸ் தயாரிக்கிறார். அம்ரேஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து விஜய் ஆதிராஜ் கூறும்போது, ''பரபரப்பான களத்தில் ஜனரஞ்சகமான ஆக்ஷன் பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். புதுமுக நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி செப்டம்பர் மாதம் முடித்து திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம்'' என்றார்.




