மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

2007ல் வெளிவந்த 'உன்னாலே உன்னாலே' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வினய். அதன்பின் சில படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலசந்தர் இயக்கத்தில் 100வது படமாக வெளிவந்த 'பொய்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விமலா ராமன். அதன்பின் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
வினய், விமலா ராமன் இருவரும் காதலிப்பதாகவும், ஒன்றாகவே வசிப்பதாகவும் கடந்த சில வருடங்களாக கிசுகிசுக்கப்பட்டது. கடந்த வருடம் விமலா ராமன் அவருடைய பிறந்தநாளின் போது வெளியிட்ட புகைப்படங்களில் வினய்யும் உடனிருந்தார். இருவரும் அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
நேற்று இருவரும் போட்டோஷுட் ஒன்றை நடத்தி அந்தப் புகைப்படங்களை இருவரது சமூக வலைத்தளங்களிலும் ஒருசேர பதிவிட்டுள்ளனர்.
சமீபத்தில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதிரி அவர்களது திருமண நிச்சய அறிவிப்பை வெளியிட்டனர். அடுத்து வினய், விமலா ராமன் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.