ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் |

கடந்த மாதம் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட லோகா சாப்டர் 1 : சந்திரா என்கிற திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்தார். டொமினிக் அருண் இயக்கினார். இதில் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார் நடிகை சாந்தி பாலச்சந்திரன். 270 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடித் காசி, என் மன வானில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினயன் இந்த படம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “என் மூளையில் உருவாகி இருந்த ஒரு கதையை திருடி இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என சொல்ல தோன்றுகிறது. தானும் இது போன்ற கதை அம்சம் கொண்ட படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் லோகா படக்குழுவினர் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பு மிக சிறப்பு'' என்று பாராட்டியுள்ளார் வினயன்.